சீனி, உருளைக்கிழங்குக்கு விசேட இறக்குமதி வரி நேற்று முதல் அமுல் | தினகரன்


சீனி, உருளைக்கிழங்குக்கு விசேட இறக்குமதி வரி நேற்று முதல் அமுல்

உள்@ர் விலைகளில் பாதிப்பு ஏற்படுத்தாது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சீனி, உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கு விசேட வர்த்தக வரி அறவிடப்படும்.

ஒரு கிலோ சீனிக்கு 12 ரூபாவும், ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு 10 ரூபாவும் இவ்வாறு விசேட வர்த்தக வரிகளாக அறவிடப்படுமென அரசு நேற்று அறிவித்தது.

உலகச் சந்தையில் சீனி விலை பெரிதும் குறைந்துள்ளது. இதனால் 12 ரூபா விசேட வர்த்தக தீர்வையை விதிக்க நேரிட் டுள்ளது. சீனி உற்பத்தியை அதிகரிக்கவும் இது அழுத்தம் கொடுக்குமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

தீர்வை அறவிடப்பட்டாலும் உள்ளூரில் சீனி விலை அதிகரிக்காது உலகச் சந்தையில் சீனி விலை குறைந்துள்ளது. பொதி செய்த சீனி 95 ரூபாவாகும். நிறுக்கப்பட்ட சீனி 88 ரூபாவாகும். இந்த விலைகளுக்கு கூடுதலாக சீனியை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகார சபை நடவடிக்கை எடுக்கும்.

உள்ளூரில் கிழங்கு உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக 10 ரூபா விசேட வர்த்தக வரி நேற்று முதல் அறவிடப்படு கிறது. இந்நாட்களில் உள்ளூரில் கிழங்கு அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. கிழங்கு இறக்குமதியை கட்டுப்படுத்தவும் உள்ளூர் விவசாயிக்கு அறுடை காலத்தில் அதிக விலை பெற வழி அமைப்பதும் புதிய தீர்வை அறவிடுவதன் நோக்கமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை அறுவடையின் போது 75,000 மெட்ரிக் தொன் கிழங்கு சந்தைக்கு வருமென மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உள்ளூர் கிழங்கு உற்பத்தி அதிகரிப் பதால் எதிர்வரும் 5, 6 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யத் தேவை ஏற்படாது என்றும் அமைச்சர் தொடர்ந்து தெரி வித்தார். (எப்.எம்.)


Add new comment

Or log in with...