விவசாயிகளை கருத்திற்கொண்டு சீனி, கிழங்கு வரி அதிகரிப்பு

பதிப்பு 02 (2015.09.09/ 16.45)
 
இறக்குமதி உணவுகள் சிலவற்றுக்கு வரி அதிகரிப்பு
 
இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகள் சிலவற்றுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி இறக்குமதி செய்யப்படும்; சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, கௌபி, குரக்கன், மாஜரின், பச்சைக் கடலை உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
இன்று (09) முதல் (நேற்று நள்ளிரவு) அமுலாகும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
 

 

பதிப்பு 01 (2015. 09.09/13.56)

இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எவ்வாறாயினும் தற்போது சந்தையில் நிலவும் விலைகளில் எவ்வித மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add new comment

Or log in with...