அமைச்சரவை இன்று கூடுகிறது: எரிபொருள் விலை குறைப்பு பற்றி ஆராய்வு

உலக சந்தை விலை வீழ்ச்சிக்கு ஏற்ப களஞ்சியப்படுத்த போதிய வசதிகள் இல்லை

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதன் உச்ச பலனை மக்களுக்கு வழங்குவதே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய எரிபொருள் விலை குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாக பெற்றோலிய மற்றும் பெற்றோலியம் வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் விலை தொடர்பான விலை சூத்திரத்திற்கு ஏற்கெனவே அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதோடு அதனை செயற்படுத்துவதன் மூலம் எரிபொருள் விலைகள் குறைவடையும் என அமைச்சின் செயலாளர் படகொட தெரிவித்தார்.

எரிபொருள் விலைகளை குறைப்பது குறித்து இன்று (09) நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது.

பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சந்திம வீரக்கொடி கடமைகளை ஏற்கும் நிகழ்வு நேற்று அமைச்சில் நடைபெற்றது. மத அனுஷ்டானங்களை தொடர்ந்து பதவியை பொறுப்பேற்ற அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

என் மீது நம்பிக்கை வைத்து முக்கிய அமைச்சு பொறுப்பொன்றை வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் சிங்கள பெளத்த மதத் தவறான போதும் ஏனைய மதத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் அவர்களின் உரிமை களை பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுபவர்.

நான் சுதந்திரக் கட்சி உறுப்பினரான போதும் நாட்டு நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல் வாதியாவேன். இணக்கப்பாட்டு அரசியல் குறித்து இன்று பேசப்படுகிறது. எமது நோக்கம் இணைக்கப்பாட்டு அரசியலை பேச்சுக்கு மட்டும் மட்டுப்படுத்தாது செயலில் கா¡ட்டுவதாகும்.

கடந்த காலத்தில் அமைச்சர் எடுக்கும் முடிவுகளை எதிர்க்கட்சி தொடர்ச்சியாக எதிர்க்கும் அரசியல் நோக்கிலே இவ்வாறு நடக்கிறது. அல்லது அமைச்சர் தவறான வழி சென்ற பின்னர் விமர்சிக்கப்படுவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இந்த அமைச்சின் நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்க இருக்கிறோம். சகல அரசியல் கட்சிகள் அடங்கலான ஆலோசனை குழுவொன்றை அமைத்து பேச்சுவார்த்தையூடாக அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன். இது தான் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். எமது மொத்த இறக் குமதியில் 25 வீதம் எரிபொருள் இறக்குமதிக்கே செலவாகிறது.

உலகில் சிறந்த வியாபாரி போன்று இந்த நிறுவனத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனத்தின் நோக்கம் நலன்புரி சேவையாகவே இருக்க வேண்டும்.

120 டொலராக இருந்த மசகு எண்ணெய் பெரலின் விலை தற்பொழுது 40 டொலர்களாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் விலை மீண்டும் உயரலாம். உலக சந்தையில் விலை குறைகையில் அவற்றை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு எம்மிடம் போதிய களஞ்சிய வசதி கிடையாது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

மொத்த எரிபொருள் தேவையில் 40 வீதமே மசகு எண்ணெய் சுத்திகரிப்பினூடாக பெறப்படுகிறது. 60 வீதம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளே கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றி அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்.

முதற்தடவையாக இயற்கை வாயு தொடர்பில் தனியான அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்படுகையில் எரிவாயு மற்றும் எரிபொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் பயனை பெறுவதன் மூலம் எரிபொருள் இறக்குமதி செலவை மட்டுப்படுத்த முடியும்.

திருகோணமலையில் எமக்கு சொந்தமான 130 ற்கு அதிகமான எரிபொருள் குதங்கள் உள்ள போதும் சுமார் 11 எண்ணெய் குதங்களே பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உலக சந்தையில் விலை குறைகையில் அவற்றை களஞ்சியப்படுத்தி அதன் பயனை மக்களுக்கு வழங்க முடியும். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதோடு மக்களுக்கு நன்மை கிடைக்க வைப்பதே எமது நோக்கமாகும்.

உலக சந்தை எரிபொருள் விலை குறைவடைவதன் உச்ச பலனை மக்களுக்கு வழங்குவதே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும். இன்று (09) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால் எரிபொருள் விலை குறைப்பு குறித்துப் பேசுவேன் என்றார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மஹிந்த அமரவீர உட்பட எம்.பி. கள் பலரும் கலந்து கொண்டனர்.

எம்.எஸ். பாஹிம் 

 


Add new comment

Or log in with...