கோத்தா, துமிந்த, ரோஹித, தனசிறி: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் | தினகரன்


கோத்தா, துமிந்த, ரோஹித, தனசிறி: ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ரக்னா லங்கா பாதுகாப்பு சேவையில் முக்கிய பதவியிலிருந்த பாலித பெனாண்டோ, கே.பி. எகொடவெல, எம்.ஆர்.டப்ளியூ சொய்சா ஆகியோரை இன்று (03) பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

 
அத்துடன் முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார, தெஹிவளை-கல்கிஸ்ஸை நகராதிபதி தனசிறி அமரதுங்க மற்றும் ஜனக ரத்னாயக ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில ஆஜராகியுள்ளனர்.
 
குறிப்பிட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில் அது குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விசாரிப்பதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
 

Add new comment

Or log in with...