எக்னெலிகொட வழக்கில் மற்றுமொரு புலனாய்வு அதிகாரி | தினகரன்

எக்னெலிகொட வழக்கில் மற்றுமொரு புலனாய்வு அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு விசாரணை தொடர்பில் மற்றுமொரு புலனாய்வு அதிகாரி இன்று (31) சி.ஐ.டியில் ஆஜராகி விசாரிக்கப்பட்டுள்ளார்.
 
இவ்வழக்கு தொடர்பில் விசாரிக்கப்படும் ஆறாவது புலனாய்வு அதிகாரி இவராவார். 
 
குறித்த அதிகாரி இன்று (31) பொலிஸ் தலைமையகத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த வியாழக்கிழமை (28) இவர் முதல் முறையாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த அதிகாரி, கடந்த யுத்தத்தின்போது செயற்பட்டவர்களில் மிக முக்கியமானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Add new comment

Or log in with...