எதிர்க்கட்சித் தலைமையை கட்சித் தலைமைகள் தீர்மானிக்கட்டும் | தினகரன்

எதிர்க்கட்சித் தலைமையை கட்சித் தலைமைகள் தீர்மானிக்கட்டும்

நாளை (01) அமையவுள்ள 8ஆவது பாராளுமன்றத்திற்கான எதிர்க்கட்சித் தலைமையை எதிர்க்கட்சியில் அமரவிருக்கும் கட்சிகளின் தலைமைகள் தீர்மானிப்பதில் தாம் தலையிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார் என ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
 
ஐ.ம.சு.முவின் தலைவர்களுக்கிடையில் இன்று (31) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
தாங்கள் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக, ஶ்ரீ.ல.சு.கவின் ஒரு குழுவினரும் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும் கடந்த சனிக்கிழமை (29) அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஶ்ரீ.ல.சு.கவின் சில எம்.பிக்கள், குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

Or log in with...