நடிகை அசின் திருமணத்திற்கு தயாராகிவருகிறாராம் | தினகரன்

நடிகை அசின் திருமணத்திற்கு தயாராகிவருகிறாராம்

பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு விலகிய பல முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் அசினும் இணைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு தயாராகிவரும் அசினுக்கு படவாய்ப்புகள் இல்லாததால், இனிமேல் நடிக்கமாட்டார் என்று கூறுகிறார்கள்.
 
மலையாளத்தில் 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன்' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி, தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அசின். 
 
இந்தியிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அப்படங்களும் ஹிட் அடித்ததால், மும்பையிலேயே டெண்ட் அடித்து தங்கிவிட்டார் அசின். இருப்பினும் அதற்கடுத்த படங்களின் தோல்வியினால், சினிமா வாய்ப்புகளை அசினால் தக்கவைக்க முடியவில்லை.
 
இந்தநேரத்தில் இவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவிற்கும் காதல் மலர்ந்து, தற்பொழுது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'ஆல் இஸ் வெல்' படத்தில் அபிஷேக்குடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தின் வெற்றியுடன் சினிமா உலகிலிருந்து வெளியேற நினைத்திருந்தார். ஆனால் இப்படமும் தோல்வியில் முடிந்ததால் அசின் சோகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
 
இந்தியிலும் மார்க்கெட் இழந்ததாலும், படவாய்ப்புகள் இல்லாததாலும், விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாலும் அசின் சினிமாவிலிருந்தே வெளியேறவிருப்பது உறுதி என்று கூறப்படுகிறது.

Add new comment

Or log in with...