போலி நாணயத்தாள் கொடுத்து பொருட்கள் வாங்கிய பெண்கள் கைது | தினகரன்


போலி நாணயத்தாள் கொடுத்து பொருட்கள் வாங்கிய பெண்கள் கைது

ஹட்டன் நகர பகுதியில் தொலைத் தொடர்பு நிலையத்தில் 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி பொருட் கொள்வனவில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு பெண்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் இருவரும் (26) ஹட்டன் நகர பகுதியில் தொலைத் தொடர்பு நிலையத்தில் விற்பனையாள ரிடம் சில பொருட்கள் கொள்வனவு செய்ததன் பின் 1,000 ரூபா நாணயத் தாளை விற்பனையாளரிடம் கொடுத் துள்ளனர்.
அதன்பின் விற்பனையாளர் நாணய த்தாள் போலியானது என இனங் கண்ட பின் சந்தேக நபர்களை தடுத்து வைத்து ஹட்டன் பொலிஸாருக்கு இச் சம்பவம் தொடர்பாக தகவலை வழங் கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பந் தப்பட்ட இடத்திற்கு விரைந்து சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற் கொண்ட பின் கைது அவர்களை கைது செய்து வழங்கிய தாளையும் கைப் பற்றியுள்ளனர்.
குறித்த நாணயத்தாள் போலி என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள வர்த்தக நிலை யத்தில் இருந்து மேற்படி நாணய த்தாள் கிடைக்கப்பெற்றதாகவும் இந்த நாணயத்தாள் போலி என தங்களுக்கு தெரியாததெனவும் குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...