பிஸ்வால் உள்ளிட்ட அமெரிக்க தூதுவர்கள் வருகை

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (25) காலை இலங்கைக்கு வந்துள்ளார்.
 
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான இவருடன், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கியும் வருகைதந்துள்ளார்.
 
இன்று அதிகாலை 3.25 இற்கு அபுதாயிலிருந்து வந்த விமானம் மூலம் இங்கு வந்திறங்கியதாக விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
 
இக்குழு இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பொருளாதாரம், ஜனநாயக அபிவிருத்தி, நல்லிணக்கம், நீதி ஆகியன தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிஷா பிஸ்வால் நாளைய தினம் (26) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
ஆயினும் ரொம் மலினொவ்ஸ்கி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Add new comment

Or log in with...