தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி | தினகரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதிகப்படியான ஆசனங்களை பெறச் செய்துள்ளதுடன் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை வட, கிழக்கு மக்கள் நிரூபித்து இருக்கின்றனர் என வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக 23ம் திகதி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 50 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிலும் 127000 மேற்பட்ட வாக்கினை எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து மூன்று ஆசனங்களைப் பெறச் செய்துள்ளனர். அதற்காக அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கெள்கின்றேன்.

அத்தோடு எனக்கு 21306 வாக்கினை அளித்துள்ளனர். அதிலும் பட்டிருப்புத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களையும் விட எனக்கே அதிகமான விருப்பு வாக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(மணல்சேனை நிருபர்)

 

  


Add new comment

Or log in with...