எக்னலிகொட விவகாரம்: விசாரணையில் இராணுவத்தினர் நால்வர் | தினகரன்

எக்னலிகொட விவகாரம்: விசாரணையில் இராணுவத்தினர் நால்வர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தெடர்பில், நான்கு இராணுவ வீரர்கள் சிஐடியினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதில் இரு லெப்டினன்ட் கேர்னல்கள், ஒரு சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தனர்.
 
அத்துடன் குறிப்பிட்ட நான்கு இராணுவ அதிகாரிகளுக்கும் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பிலான சிஐடியினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் இராணுவ தலைமையகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Add new comment

Or log in with...