ஒப்சேவர்-மொபிடல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் வைபவம் ஒளிபரப்பு | தினகரன்

ஒப்சேவர்-மொபிடல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் வைபவம் ஒளிபரப்பு

2015 ஆம் ஆண்டுக்கான 37ஆவது ஒப்சேவர்-மொபிடல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் வைபவத்தின் ஒளிபரப்பு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
 
பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அமைந்த இந்நிகழ்வில் தமிழ், சிங்கள, ஆங்கில மற்றும் ஹிந்திப் பாடல்கள் மற்றும் பிரபல நடனக் கலைஞர் சந்தன விக்ரமசிங்கவின் நடன நிகழ்ச்சி என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
நாடுமுழுவதிலுமள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் நடாத்தப்பட்ட ஒப்சேவர் – மொபிடல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களும் பங்குபற்றியிருந்ததோடு, பெறுமதிமிக்க விருதுகள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
 
மிகக் கோலாகலமாக கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வை நாளை மறுதினம் (22) இரவு 10.00 மணிக்கு நேத்ரா அலைவரிசையில் காணலாம்.

Add new comment

Or log in with...