பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி | தினகரன்

பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி

பேருவளையிலிருந்து சென்ற படகு விபத்து; நால்வர் பலி-Boat Went From Beruwal Accident-4 Dead
(வைப்பக படம்)

 

இருவரை காணவில்லை; ஒருவர் உயிருடன் மீட்பு

பேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற மீன்பிடிப்படகொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.

நேற்று (11) பிற்பகல், பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 07 பேருடன் மீன்பிடிக்காகச் சென்ற பல்தேவை மீன்பிடிப் படகொன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர்.

இவ்விபத்தில் குறித்த படகில் சென்ற இருவரைக் காணவில்லை எனவும் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

"மலிந்து புத்தா" எனும் குறித்த பல்தேவை மீன்பிடிப்படகு, காலியிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் வைத்து, கப்பலொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த நால்வரின் சடலங்களையும் காப்பாற்றப்பட்ட நபரையும், கடற்படையினர் காலி துறைமுக பொலிசாரிடம் இன்று (12) ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...