பாரிஸில் ஆப்கான் நாட்டவர் தாக்குதல்: ஏழு பேர் காயம் | தினகரன்


பாரிஸில் ஆப்கான் நாட்டவர் தாக்குதல்: ஏழு பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பியுடன் வந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டதோடு அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஆப்கான் நாட்டவர் என கூறப்படும் அந்த தாக்குதல்தாரி பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கால்வாய் கரைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தமக்கு அறிமுகம் இல்லாத இரு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் மீது அந்த நபர் ஆரம்பத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நபர் வெறு ஒரு இடத்தில் இரு பிரிட்டன் நாட்டவர்களை தாக்கியுள்ளார். “இந்த தருணத்தில் இது பயங்கரவாத தாக்குதல் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...