களத்தடுப்பு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பீல்டர் கோச்சராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரான்ட்பிராட்பர்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கும் அதேவேளையில்,களத்தடுப்பில் சற்று பலவீனமாக காணப்படுகிறது.

இதனால் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரான்ட் பிராட்பர்ன்-ஐ களத்தடுப்பு பயிற்சியாளர் நியமனம் செய்துள்ளது. இவர் ஆசிய கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக செயல்படுவார்.

கிரான்ட் பிராட்பர்ன் நியூசிலாந்து அணிக்காக 1990 முதல் 2001 வரை 7 டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Add new comment

Or log in with...