வடக்கு காணி ஆணையாளர் அலுவலகத்திற்கு காணி | தினகரன்

வடக்கு காணி ஆணையாளர் அலுவலகத்திற்கு காணி

வடக்கு காணி ஆணையாளர் அலுவலகத்திற்கு காணி-Land for Northern Province Land Commission


வட மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான அலுவலகத்தினை அமைக்க கிளிநொச்சியில் காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குறித்த வடமாகாண அலுவலகத்தை கிளிநொச்சியயை மையப்படுத்தி மக்களிற்கு சேவையாற்றும் வகையில் குறித்த அலுவலகத்தை அமைப்பதற்கான காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறித்த விடயம் தொடர்பில் பல்வேறு தடவைகள் பேசப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு இழுபறிக்கு மத்தியில் கிளிநொச்சி நகரில் குறித்த மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தினை அமைப்பதற்கான இடம் இன்று (07) வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தபால் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு பின்புறமாக சுமார் ஒரு ஏக்கர் அளவு கொண்ட காணி குறித்த அலுவலகத்திற்காக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த காணி, கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தனால் மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாண உதவி காணி ஆணையாளர் ஆகியோரிடம் அடையாளம் காட்டப்பட்டதுடன், அது காணி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பான பதாகை ஒன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் மாகாண காணி ஆணையாளரிடம் ஊடகங்கள் வினவியபோது,
வடமாகாண மக்களிற்கு வேவை வழங்குவதற்காக காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவு்ம, அந்த அடிப்படையில் இன்று கிளிநொச்சியில் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டா்ர.

கிளிநொச்சியை மைய்யப்படுத்தி கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிற்கு வேவைகளை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த காணியில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு ரூபா 15 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவு்ம, அதனைக்கொண்டு கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியிலிருந்து மக்களுக்கான சேவைகள் எக்காலப்பகுதியிலிருந்து முன்னெடுக்கப்படும் என அவரிடம் வினவியபோது,

அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கும் நிதியுடன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிற்கு இங்கிருந்து சேவை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இருப்பினும் பொருத்தமான கட்டடம் ஒன்ற தற்காலிகமாக வழங்கப்படும் பட்சத்தில் இங்கிருந்து இப்பொழுதே மக்களிற்கான சேவைகைளை வழங்க தம்மால் முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டமை குறிப்பிடதக்கதாகும்.

குறித்த விவகாரம் தொடர்பில் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

(எஸ்.என். நிபோஜன்)

 


Add new comment

Or log in with...