மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால் | தினகரன்

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்-Batticaloa Hartal Water Bottle-Muslim-Tamil Relationship

 

தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்து கரி நாள் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியுமே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்-Batticaloa Hartal Water Bottle-Muslim-Tamil Relationship

இதேவேளை, முஸ்லிம் விரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியும் தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கரி நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் பொது சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்-Batticaloa Hartal Water Bottle-Muslim-Tamil Relationship

சில பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன் சில பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் சமூக மளிக்கவில்லை.

அரச தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் அதிகாரிகள் வருகை குறைவாக காணப்பட்டன. அரச தனியார் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சேவையிலீடுபட்ட போதிலும் தனியார் பஸ் வண்டிகள் மிக குறைவாக சேவையில் காணப்பட்டன.

மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிட நிலையம் வெறிச்சோடிக்காணப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, மற்றும் பதுளை வீதி, மட்டக்களப்பு கல்லடி, கிராண்குளம், நாவற்குடா ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு வாகன போக்கு வரத்திற்கான தடைகள் ஏற்படுத்தப்ட்ட போதிலும் பொலிசார் ஸ்தளத்திற்கு விரைந்து அவைகளை அகற்றி வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்-Batticaloa Hartal Water Bottle-Muslim-Tamil Relationship

எனினும் வாகனப் போக்குவரத்துக்கள் குறைவாக காணப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மற்றும் செங்கலடி பிரதேசங்களில் ஆங்காங்கே சில பஸ் வண்டிகளுக்கு கற்கள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிசார் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிராக ஹர்த்தால்-Batticaloa Hartal Water Bottle-Muslim-Tamil Relationship

மட்டக்களப்பு, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராகவும் அதனை நிறுத்துமாறு கோரியும் மாவட்டம் முழுதிலும் ஹர்தால் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நீதி கோரும் மக்கள் குரல் என்ற அமைப்பு, முஸ்லிம் விரோத செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியும் தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைவதை கண்டித்து கரி நாளுக்கான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், மட்டக்களப்பு விசேட நிருபர் - சிவம் பாக்கியநாதன்)
 


Add new comment

Or log in with...