மக்கள் பலம் பேரணியின் இரண்டாம் கட்டம் கண்டியில் | தினகரன்


மக்கள் பலம் பேரணியின் இரண்டாம் கட்டம் கண்டியில்

மக்கள் பலம் எதிர்ப்பு பேரணியின் இரண்டாம் கட்டத்தை கண்டியில் இருந்து ஆரம்பிக்க இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறினார்.

இதுவரை இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற நீண்ட மற்றும் அதிக மக்கள் பங்கேற்ற மக்கள் பேரணி. அண்மையில் நடந்த மக்கள் பலம் கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணியாகும் எனவும் அவர் கூறினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் , மக்கள் பலம் கொழும்பிற்கு எதிர்ப்பு பேரணி தொடர்ச்சியாக 12 மணி நேரம் இடம்பெற்றதென்று குறிப்பிட்டார்.

நேற்றைய பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் பல முயற்சிகள் எடுத்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை பேரணியில் கலந்துகொண்டதாகவும் மஹிந்தானந்த எம்.பி மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...