நெஸ்டமோல்ட் அனுசரணை: அகில இலங்கை பாடசாலை அரை மரதன் போட்டி இன்று | தினகரன்

நெஸ்டமோல்ட் அனுசரணை: அகில இலங்கை பாடசாலை அரை மரதன் போட்டி இன்று

கல்வி அமைச்சின் விளையாட்டு பிரிவு மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியின் ஒரு அங்கமான அரை மரதன் ஓட்டப் போட்டி இன்று குளியாப்பிட்டியில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த போட்டி இரண்டு கட்டங்களாக இடம்பெறும்.அமைச்சூர் போட்டி 5 கிலோமீற்றரும், அகில இலங்கை பாடசாலை ஓட்டப் போட்டி 15 கிலோமீற்றர் கொண்டதாக உள்ளது. இரண்டு போட்டிகளும் இன்று மாலை 4 மணிக்கு குளியாப்பிட்டி தொழிநுட்ப கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்று ஆரம்பித்த இடத்தில் முடிவுறும்.

மூன்று தசாப்த காலமாக இடம்பெறும் நெஸ்டமோல்ட் மரதன் போட்டி பாடசாலை விளையாட்டு நாட்காட்டியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இந்த போட்டிகளில் பிரகாசித்த வீர வீராங்கனைகள் தேசிய ரீதியில் பிரகாசித்து வருகின்றனர்.

இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் நெஸ்டமோல்ட் உன்னத இடத்தை வகிக்கின்றது.

ஏ.ஆர்.பரீத்


Add new comment

Or log in with...