டிரம்பிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி | தினகரன்


டிரம்பிடமிருந்து அமெரிக்காவை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மோசமாக நாட்டங்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க ஜனாதிபதியின் திட்டத்தில் இருக்கும் சில பகுதிகளை முடக்குவதற்கு நிர்வாக உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் “இரக்கமற்ற தன்மை” மற்றும் “தொலைநோக்கில்லாத செயல்பாடு” ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்தன என்று நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கத்தில் கட்டுரையாசிரியர் எழுதியிருந்தார்,

பெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...