காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் | தினகரன்

காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்

காணாமல் போனோர் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்-Interim Report of Missing Person's Office handed Over to President

 

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஆறு மாத காலமாக இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...