வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம்
'ஜன பலய கொலம்பட்ட' (மக்கள் பலம் கொழும்பை நோக்கி) எனும் ஒன்றிணைந்த எதிரணியினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி லேக் ஹவுஸிற்கு முன்னால் தற்போது அணி திரண்டுள்ளது.
இப்பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்கத்கது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை முற்றுகையிட்டிருப்பதன் காரணமாக கொழும்பு, புறக்கோட்டையிலிருந்து டெக்னிகல் சந்தி வரையான பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இன்று (05) 2.30 மணியிலிருந்து மூடப்பட்டதோடு, பெரும்பாலான அலுவலக உத்தியோகத்தர்கள் பிற்பகல் 3.00 மணிக்கு வீடு திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, கொழும்பில் பணி புரியும் பெரும்பாலானோர் இன்று (05) தங்களது கடமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுவதுடன், இன்று (05) காலை முதல் வாகன போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பேரணி, பாதைகளை முற்றுகையிடும் எனும் அச்சத்தினால் இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
Add new comment