அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி இடைநீக்கம் | தினகரன்

அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி இடைநீக்கம்

சென்னை வந்த மு.க.அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் கட்சியில் தன்னை சேர்ப்பார்கள் என்று அவரது மகன் மு.க.அழகிரி எதிர்பார்த்தார். கட்சியில் தன்னை இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் ஸ்டாலின் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கூறி வந்த அழகிரி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார்.

இதற்காக மு.க.அழகிரி நேற்று முன்தினம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டிருந்தனர். திமுக நிர்வாகி ரவியும் அழகிரியை வரவேற்றார்.

இதனையடுத்து ரவி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாக அன்பழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...