வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல் | தினகரன்


வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்

வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்-Johnston Fernando and 3 Others Remanded Till the Case Finish

 

சதொச கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான நிதியை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவரையும், வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தல் வேளையில், சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடி தொடர்பிலேயே முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று (03) குருணாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் அந்தரங்கச் செயலாளர் மொஹமட் சாகிர் ஆகியோரே இவ்வழக்கின் ஏனைய இரு பிரதான சந்தேகநபர்களாவர்.

இதேவேளை, இவ்வழக்கு இன்றிலிருந்து தொடர்ச்சியாக விசாரணை செய்யப்படும் எனவும் நீதவான் இதன்போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...