காமினி செனரத்திற்கு விசேட மேல் நீதிமன்றத்தில் பிணை

காமினி செனரத்திற்கு விசேட மேல் நீதிமன்றத்தில் பிணை-Bail for Presidents Chief of Staff Gamini Senarath-Specail High Court

 

முன்னாள் ஜனாதிபதியின் ஆளணியின் பிரதானியான காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு விசேட மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் ரூபா 500 மில்லியன் நிதியை, முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிலேயே அவர்களுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (24) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாமை உள்ளடக்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் நிபந்தனையுடன் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பாரிய குற்றச் செயல்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை கருத்திற்கொண்டு, விசேட மேல் நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டதற்கிணங்க, குறித்த நீதிமன்றில் இடம்பெற்ற முதலாவது வழக்கு விசாரணையின்போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


Add new comment

Or log in with...