யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு | தினகரன்

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

ரூ. 530 மில்லியன் நிதியில் புனர்வாழ்வு மையத்திற்கு அடிக்கல்

யாழ். போதனா வைத்தியசாலையில், அரச மருந்தகம் (ஒசுசல) கிளையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனரத்னவினால் இக்கிளை திறந்து வைக்கப்பட்டது. இந்நிழக்வில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம் பிரதி அமைச்சர் பைசல் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

இன்று (16) காலை 10.00 மணியளவில் யாழிற்கு வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட அரச மருந்தக கிளையை திறந்து வைத்தார்.

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

இம்மருந்தகத்தில் மிக குறைவான விலையில் மருந்துகளை கொள்வனவு செய்யலாம் என, அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

அதனைத் தொடர்ந்து, குவைத் அரசாங்கத்தினால் சுமார் 530 மில்லியன் ரூபா நிதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

யாழ் வைத்தியசாலையில் அரச ஒசுசல திறப்பு-Rajitha Open New Osusala Branch In Jaffna Teaching Hospital

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்களுக்கான தங்குமிடம் விடுதியினை திறந்து வைத்ததுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சின் பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம், சரவணபவன், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான கே. சிவாஜிலிங்கம், கே. சயந்தன் மத குருமார்கள் உட்பட வைத்தியர்கள், தாதியர்கள், குவைத் நாட்டின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Add new comment

Or log in with...