அமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க அங்கவீனமுற்ற போராளிகள் அமைப்பு முடிவு | தினகரன்


அமைச்சர் ரிஷாட்டை ஆதரிக்க அங்கவீனமுற்ற போராளிகள் அமைப்பு முடிவு

பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்ய தாங்கள் அணி திரண்டுள்ளதாக கடந்த யுத்தத்தில் அங்கவீனமுற்ற போராளிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று வெல்லாங்குளத்தில் இடம்பெற்ற போராளிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைப்பின் தலைவர் மோகன் இதனை கூறினார். தேசியத்துக்கான தாங்கள் அனைத்தை யும் இழந்ததாகவும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எங்களுக்கு எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதாகவும் அவர் கூறினார்.

யுத்தத்தின் போது தாங்கள் அனைத்தையும் இழந்ததாகவும் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லாத நிலையில் நாம் அவலமுற்ற போதும் இந்த வன்னி தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சொகுசு வாழ்க் கையினை வாழ்ந்ததாகவும் இந்த தேர்தலில் அவர்களை தோற்கடிக்க தாங்கள் எங்களது உறவுகளுடன் அங்கவீனத்தையும் பாராது களத்தில் இறங்கியுள்ளதாகவும் இதுவரைக்கும் தமது அமைப்பில் 800 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில் தம்பி றிசாத் பாதிக்கப்பட்ட மக்களு க்கு ஆற்றி வருகின்ற பணிகளை இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதமாக பேசுகின் றது. வடக்கு முஸ்லிம் களை வெளியேற்ற வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களை வெளியேற்ற பலவந்தப்படுத்தி யவர் கருணா எனவும் அவர் கூறினார். இந்த வகையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றிவர்கள் தியாகிகளா. அவர்கள் துரோ கிகள் என பகிரங்கமாக தான் இங்கு கூற விரும்புகின்றேன்.

மரணத்தின் விழிம்பில் இருந்து நாங்கள் வந்துள்ளோம். எமது மண்ணுக்காக மக்களுக்காக வலுவிழந்த உறவுகளுக்காக நாம் போராட தயாராகவுள்ளோம். அந்தப் போராட்டம் அபிவிருத்திக்கானதாகவே இருக்கும். இந்த துய பயணத்தில் தம்பி ரிஷாத் பதியுதீனுடன் இணைந்து செல்ல நாம் தயாராக இருக்கின்றோம்.

அவரது வெற்றி இந்த மண்ணினதும் மக்களினதும் வெற்றியாகும் என்பதை இந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி புரியவைப்போம் என்றும் தலைவர் மோகன் கூறினார். 


Add new comment

Or log in with...