கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமி குழந்தை பிரசவம் | தினகரன்

கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமி குழந்தை பிரசவம்

பெரகுவேவில் தனது தாயின் கணவரால் கற்பழிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கருக் கலைப்பு மறுக்கப்பட்ட நிலை யில் குழந்தை பெற்றுள்ளார்.

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த அந்த சிறுமி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரோமன் கத்தோலிக்க பெரும்பான்மை கொண்ட பரகுவேயில் தாயின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலேயே கருக்கலை ப்புக்கு அனுமதி அளிக்கப் படுகிறது.

சிறுமியின் விவகாரத்தில் கருக்கலைப்பு மறுக்கப்பட்ட தற்கு இது மாத்திரம் காரணம் அல்ல என்று சுகாதரா அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த சிறுமி 10 வயதாக இருக்கும்போதே அவர் பாலியல் பலாத் காரத்திற்கு முகம்கொடுத்துள்ளார். அவரது பாதுகாப்பிற் காக சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை.

தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் 42 வயதான தாயின் கணவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்கு விசாரணைக்காக அவர் காத்துள்ளார். அலட்சிய மாக இருந்ததாக சிறுமியின் தாய் மீது குற்றச்சாட்டு சுமத் தப்பட்டுள்ளது.

இதில் மேலும் பல பதின்ம வயதுடையவர்களுடன் 12 வயது சிறுமியர் இருவரும் குழந்தை பெற காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...