கடவத்தை துப்பாக்கிச்சூட்டில் 34 வயது பெண் பலி | தினகரன்

கடவத்தை துப்பாக்கிச்சூட்டில் 34 வயது பெண் பலி

கடவத்தை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி-Kadawatha Gonahena Shooting 34 Year Old Killed

 

கணவனை கொலை செய்த வழக்கின் சந்தேகநபர்

கடவத்தை, கண்டி வீதி, கோணஹென சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காயமடைந்த குறித்த பெண், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடவத்தை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி-Kadawatha Gonahena Shooting 34 Year Old Killed

கடவத்தை, ரன்முத்துகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான சமிலா குமாரி எனப்படும் குறித்த பெண், கொலை வழக்கொன்றின் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் (2017) டிசம்பர் 30 ஆம் திகதி, குறித்த பிரதேசத்திலுள்ள வர்த்தகரான குறித்த பெண்ணின், விவாகரத்தான கணவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடவத்தை துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி-Kadawatha Gonahena Shooting 34 Year Old Killed

குறித்த வழக்கு தொடர்பில் விளக்கமறியல் விதிக்கப்பட்ட அவர், கடந்த மாதமளவில் பிணையில் விடுதலை ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வழக்கு இன்று (07) இடம்பெற்ற நிலையில், குறித்த வழக்கிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோதே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

 


Add new comment

Or log in with...