கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி | தினகரன்

கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி

கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி-Kilinochchi Iyakachchi Accident-Mother and Daughter Killed

கிளிநொச்சி- இயக்கச்சி பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளும் அவரை அழைத்து வந்த தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி-Kilinochchi Iyakachchi Accident-Mother and Daughter Killed

விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்துறை தும்பளையை சேர்ந்த குடும்பம் ஒன்று வெளி நாட்டிலிருந்து வந்த தமது மகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தபோது, இயக்கச்சிக்கும் பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் மின் கம்பங்களுடன் வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் ஹயஸ் வாகனம் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி இயக்கச்சி விபத்தில் தாயும் மகளும் பலி-Kilinochchi Iyakachchi Accident-Mother and Daughter Killed

இந்த விபத்தில் வெளிநாட்டில் இருந்துவந்த மகளும் மகளை அழைக்க சென்ற தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

Add new comment

Or log in with...