இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து | தினகரன்

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-Accident-2 Buses Hit by Opposite Direction

கினிகத்தேனை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் இரண்டாம் கட்டை உலங்கஸ்ஹின்ன பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-Accident-2 Buses Hit by Opposite Direction

இவ்விபத்து இன்று (31) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனைக்கு பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-Accident-2 Buses Hit by Opposite Direction

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்கு சென்ற பஸ், லொறி ஒன்றை முந்தி செல்ல அதிகவேகத்துடன் சென்ற வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் குறித்த பஸ் சாரதி நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளார்.

இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-Accident-2 Buses Hit by Opposite Direction

இந்த விபத்தில் இரு பஸ்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

Add new comment

Or log in with...