கைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவவுக்கு வி.மறியல் நீடிப்பு | தினகரன்

கைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவவுக்கு வி.மறியல் நீடிப்பு

கைதிகள் கொலை; எமில் ரஞ்சன், ரங்கஜீவவுக்கு வி.மறியல் நீடிப்பு-Emil Ranjan Niyomal Rangajeewa Re Remanded

 

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கடந்த மார்ச் மாதம் CID யினால கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (31) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் இருவரையும், எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை, விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவை வழங்கினார்.

 


Add new comment

Or log in with...