ப்ளுமெண்டல் வீதி சூட்டு சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைது | தினகரன்

ப்ளுமெண்டல் வீதி சூட்டு சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைது

இருவரைப் பலி கொண்ட கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருடன் மொத்தமாக ஐவர் இதுவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 
 
மேலும் இச்சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட வாடகைக் காரைப் பயன்படுத்தியவர் மற்றும் அதனை வாடகைக்கு கொடுத்தவர் ஆகியோரும் இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
[[{"type":"media","view_mode":"media_large","fid":"3061","attributes":{"alt":"","class":"media-image","style":"width: 480px; height: 382px; float: right;","typeof":"foaf:Image"}}]]
அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புற்ற ‘சுது’ என அழைக்கப்படும் சமீர ரசங்க என்பவரையும் தாங்கள் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இவர் ஶ்ரீ தர்மாராம வீதி, தெமடகொடை மற்றும் ஹிம்புத்தானை வீதி, அங்கொடை ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பிட்ட நபர் பற்றி அறிந்தோர் 0718 591770, 0718591753, 0773291500 எனும் தொலைபேசி இலக்கங்களூடாக தகவல்களை வழங்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Add new comment

Or log in with...