மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு | தினகரன்

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ரூபா 80 கோடி செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் உதவியுடன் சுகாதார அமைச்சு, அவுஸ்திரேலியா, ஶ்ரீ லங்கா ரெலிகொம் மற்றும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் சுமார் ரூபா 80 கோடி செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

இலங்கையின் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அடுத்ததாக முற்றிலும் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண மக்கள் பயன் பெறக் கூடிய வகையில் இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம் அமையப் பெற்றுள்ளதுடன் இங்கு சத்திர சிகிச்சைக் கூடங்கள் மற்றும் விடுதிகள் ஆய்வு கூட வசதிகள் உட்பட பல்வேறு பகுதிகள் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

சுனாமி அனர்த்தத்தை அடுத்து, அவ்வாறான பாரிய விபத்துகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் தலைவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டேவிட் யங்கின் ஆலோசனையுடன் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகாதார அமைச்சின் உதவியுடன் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ். உமர்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன், இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றத்தின் தலைவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி டேவிட் யங், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் உட்பட வைத்திய நிபுணர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள், அவுஸ்த்ரேலியாவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் இதற்கு நிதியுதவிகளை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டு. போதனாவில் ரூ. 80 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு-Opening of Accident & Emergency Unit Batticalao Worth Rs. 80 Crore

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

Add new comment

Or log in with...