யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி | தினகரன்

யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Jaffna Mallakam Police Shooting One Dead

 

வெட்டுக்காயத்துடனான இருவர் உள்ளிட்ட ஐவர் கைது

யாழ்ப்பாணம், மல்லாகமம் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிசார் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்ட நிலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (17) பிற்பகல் சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிசார் இருவர், தமது பணி நிமித்தமாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த பெண் ஒருவரின் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெற்ற உடனடி மரண விசாரணைக்காக, மல்லாகம் பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தனர்.

யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Jaffna Mallakam Police Shooting One Dead

இதன்போது, வாள், தடி, இரும்பு போன்றவற்றுடன் மல்லாகமம் சந்தியில்  சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது நபர் ஒருவர், மற்றொரு நபரை கீழே தள்ளி வாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக செயற்பட்ட பொலிசார் அவர்களை விலக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது அதிலிருந்த நபர் ஒருவர், பொலிசாரை வாளால் வெட்ட முயற்சி செய்துள்ள நிலையில், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் (33) எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Jaffna Mallakam Police Shooting One Dead

மல்லாகம் சகாய மாதா கோவில் பெருநாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸாரை கைதுசெய்யுமாறு பொது மக்கள் மல்லாகம் சந்தி வீதியை மறித்துப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும். இப் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாகவும்  சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும், எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவர் உள்ளிட்ட ஐவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வெட்டுதல், மற்றும் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

யாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி-Jaffna Mallakam Police Shooting One Dead

மரணமடைந்தவர் தொடர்பான மரண விசாரணைகளை மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

(படங்கள்: சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...