மொபைல்போன் கம்பனி உரிமையாளரை கைப்பிடிக்கும் அசின் | தினகரன்


மொபைல்போன் கம்பனி உரிமையாளரை கைப்பிடிக்கும் அசின்

அசின், எம் குமரன் S/o மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா, என ஜோடி சேர்ந்தவர் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் இவர் நடித்த முதல் படம் உள்ளம் கேட்குமே ஆகும். 
 
பின்னர் ‘கஜினி’ ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் இணைந்தார், அதன் பின் பல ஹிந்தி படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழில் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி நிறுவனமான மைக்ரோமெக்ஸின்  உரிமயாளர்களில் ஒருவரும், தொழிலதிபருமான ராகுல் ஷர்மாவை அசின் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவிக்ப்படுகின்றது.
 
திருமணத்திற்கு பிறகு நடிக்கும் எண்ணம் இல்லை என தெரிவிக்கப்படுவதோடு, அவர் ஒப்பந்தமான அனைத்து சினிமா வேலைகளையும் முடித்த கையோடு அவரது திருமணம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்த இருவரும் பொறுமையாக கலந்து பேசியே இந்த திருமண முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Add new comment

Or log in with...