சற்று முன்னர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கான் பகுதிகளில் நிலநடுக்கம் | தினகரன்

சற்று முன்னர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கான் பகுதிகளில் நிலநடுக்கம்

சற்று முன்னர் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஒன்று மையம் ஏற்பட்டிருந்தது. 
 
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வு வடஇந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல நகரங்களில் உணரப்பட்டதோடு, நேபாளத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
 
இதனால் டெல்லி, சண்டீகர், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில்  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக மக்கள் பீதியடைந்து ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், முசாப்பராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் ஆப்கானிலும் இந்நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
 
இது வரை சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதோடு இந்நில அதிர்வு மேலும் பல பிரதேசங்களில் உணரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Add new comment

Or log in with...