ஜார்கண்ட் கோயில் விழா நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம், டியோகர் மாவட்டத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பக்தர்கள் உயிரிழந்தனர்.
 
தலைநகர் ரஞ்சியில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் பேலாபகன் உள்ள இந்த கோயிலில் அம்மன் சிலையை கங்கை நீரால் நீராட்டும் நிகழ்வு இன்று (10) அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்று கொண்டிருந்தது. இதில் பங்கேற்க நேற்றிரவில் (09) இருந்தே சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் குவிந்திருந்தனர்.
 
கிலோ மீட்டர் கணக்கில் நீண்டிருந்த வரிசையில் காத்திருந்த பக்தர்கள், குறுகலான பாதை வழியாக ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றதால் திடீரென அங்கு நெரிசல் ஏற்பட்டது.[[{"type":"media","view_mode":"media_large","fid":"2923","attributes":{"alt":"","class":"media-image","style":"font-size: 13.0080003738403px; line-height: 1.538em; width: 300px; height: 225px; float: right;","typeof":"foaf:Image"}}]]
 
வரிசை கலைந்து அனைவரும் கோயிலின் முன்பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினர். இதில் சிலர் கால் தடுமாறி கீழே விழுந்தனர். இதன்போது பின்னால் ஓடிவந்தவர்கள் அவர்கள் மீது தடுக்கி விழுந்தனர். அடுத்தடுத்து, ஓடி வந்தவர்களும் ஒருவர்பின் ஒருவராக கீழே விழுந்து மிதிபட்டனர்.
 
இந்த கோர சம்பவத்தில் 11 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Add new comment

Or log in with...