பால் மா விலை ரூ. 50 ஆல் அதிகரிப்பு | தினகரன்

பால் மா விலை ரூ. 50 ஆல் அதிகரிப்பு

பால்மா விலை ரூ. 50 ஆல் அதிகரிப்பு-Milk Powder Price Increased

 

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலாகும் வகையில் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பால் மா நிறுவனங்களினால் விடுக்கப்பட்ட விலை அதிகரிப்பு கோரிக்கைக்கு அமைய, 400 கிராம் பால்மாவின் விலையை ரூபா 20 இனால் அதிகரிக்க, வாழ்க்கைச் செலவு குழுவினால் நுகர்வோர் அதிகார சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, குழந்தைகளுக்கான பால் மாக்கள் தவிர்ந்த ஏனைய பால் மாக்களின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை ரூபா 50 இனாலும், 400 கிராம் பைக்கற் பால் மாவின் விலை ரூபா 20 இனாலும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது வரை ரூபா 325இற்கு விற்பனை செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் புதிய விலை ரூபா 345 ஆகவும் ரூபா 810 இற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பால் மாவின் புதிய விலை ரூபா 860 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...