நிலக்கரி டெண்டர் சட்டபூர்வமானது; மோசடிகள் எதுவும் நிகழவில்லை | தினகரன்

நிலக்கரி டெண்டர் சட்டபூர்வமானது; மோசடிகள் எதுவும் நிகழவில்லை

 டெண்டர் முறைக்கு புறம்பாக அல்லது நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி திடீர் டெண்டர் வழங்குவதோ நடைபெறுவதில்லை.

இரு வருடங்களுக்கு முன்னர் நூற்றுக்கு நூறு வீதம் டெண்டர் முறையைப் பின்பற்றி ரெண்டர் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கு எவ்வித இடமும் இல்லை.

இதனால் கலக்கமடைந்த சில மோசடிக்காரர்கள் இந்த நிலைமையை உருவாக்க முயற்சிப்பது கவலை தருவதாகும்.

நிலக்கரி ரெண்டர் முறை சட்டபூர்வ மானது. எந்தவித மோசடிகளும் நிகழ இடமில்லை.

மின்சக்தி எரிசக்தி அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த ரெண்டர் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதிக்கு அமைச்சரவை அதிகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி கொள்வனவு மேன்முறையீ ட்டு சபையின் தீர்மானத்தின் பேரில் சிபார்சுகளை கருத்திற் கொண்டு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் சிபார்சின் பேரில் நிலக்கரி கொள்வனவுக்காக நீண்டகால ரெண்டர் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தீர்மானம் மூன்று தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சின் அறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் நிலக்கரி ரெண்டர் வழங்கல் தொடர்பாக தெரிவிக்கப்படும் தவறான செய்திகள் வெளியானமை தொடர்பாக விளக்கி அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட் டுள்ளது. (எப். எம்.)

 

 


Add new comment

Or log in with...