வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர் | தினகரன்

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர்

 கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இக்கொலைகளுக்காக தமிbழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துகொண்ட ஆயுதக் குழுக்களையும் கடந்த அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் அரசியல்வாதியாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்டார்.

அவர்களின் குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை நியாயப்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரான தனக்கு வழியுறுத்தியதாகவும் அதனை நிராகரித்தமையினால் தன்னை மட்டக்களப்பிற்கு மாற்றம் செய்துள்ளதாகவும், கிழக்கு ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி தன்னை கொலை செய்ய திட்டமிட்டதனால் தான் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...