‘பியார் பிரேமா காதல்' இல் அறிமுகமாகிறார் யுவனின் மனைவி | தினகரன்

‘பியார் பிரேமா காதல்' இல் அறிமுகமாகிறார் யுவனின் மனைவி

ஆடை வடிவமைப்பாளராக யுவனின் மனைவி

இரண்டு திருமண முறிவுக்குப் பிறகு, இஸ்லாமிய மதத்துக்கு மாறி மூன்றாவதாக ஜபருன்னிசா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

படங்களுக்கு இசையமைப்பதோடு, தயாரிப்பையும் தொடங்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண், ரைஸா  இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில்தான் யுவனின் மனைவி ஜபருன்னிசா அறிமுகமாகிறார். நடிகையாக அல்ல, ஆடை வடிவமைப்பாளராக! ரைஸாவிற்கு அவர்தான் உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார். யுவனின் குடும்பத்தில் வாசுகி பாஸ்கர் என ஏற்கெனவே பிரபலமான ஒரு ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...