இலங்கை பணிப்பெண் சவூதி நாட்டவரால் சுட்டுக் கொலை | தினகரன்


இலங்கை பணிப்பெண் சவூதி நாட்டவரால் சுட்டுக் கொலை

 

சந்தேகநபர் உள நலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய இலங்கை பெண் சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

சவூதி பிரஜையான குறித்த சந்தேகநபரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 42 வயதான இலங்கைப் பெண்ணே வீட்டுக்குள் வைத்து இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குவாஸ்ஸிம் பொலிஸ் பேச்சாளர் லெப்டினன்ட் பாதர் அஸ்ஸாபனி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை (10) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபரான 30 வயதான சவுதிப்பிரஜை பின்னர் அதே துப்பாக்கியில் தனக்குத்தானே  சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் தற்போது அல் ராஸ் பிரதேசத்தில உள்ள மோர்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக,  பொலிஸ் பேச்சாளர் அஸ்ஸாபனி தெரிவித்துள்ளார்.

(சவுதி கெசட்)

 


Add new comment

Or log in with...