ஜப்பானில் இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட அணுகுண்டுத் தாக்குல் | தினகரன்


ஜப்பானில் இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட அணுகுண்டுத் தாக்குல்

 ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி ஆகிய நகரங்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளநிலையில் ஜப்பானிய வைத்தியசாலைகளில் உயிர்பிழைத்த ஆயிரக்கணக்கானவர்கள் இன்றும் சிகிச்சைபெற்றே வருகின்றனர்.

அணுகுண்டுத் தாக்குதலில் சிக்குண்டவர் களில் மூன்றில் இரண்டு பகுதியினர் புற்றுநோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். உலக வரலாற்றில் பேரளிவை ஏற்படுத்திய இச்சம்பவம் இடம்பெற்று 70 ஆண்டுகள் உருண்டோடியும் பாதிப்புக்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி காலை 8.15 மணிக்கு ஜப்பானின் ஹிரோஷிமா நகர வான் எல்லையில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான பி-29 விமானம் ‘குட்டிப் பையன்’ ‘Fat Man’  என்ற பெயர்கொண்ட 16 கிலோ டொன் எடையுள்ள யுரேனியம் அணுகுண்டை வீசியது. பரசூட் மூலம் வீசப்பட்ட குண்டு வானத்தில் சூரியனைப் போன்ற வெளிச்சத்தை ஏற்படுத்தியது. சில நொடிகளில் ஹிரோஷிமா நகரம் நரகமாகியது. நகரம் முழுக்க தீப்பிடித்ததுடன், வெப்பநிலை 4000 டிக்கிரியைத் தாண்டியது.

80,000 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன், உயிர் தப்பிய 200,000ற்கும் அதிக மானவர்கள் நீண்டகாலமான நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகினர். இச்சம்பவம் இடம்பெற்று மூன்று தினங்கள் கடந்த நிலையில் அமெரிக்க விமானப்படையின் பி-29 விமானம் ‘குண்டு மனிதன்’ ‘பிat ணிan’ என்ற மற்றுமொரு அணுகுண்டை வீசியது. இத்தாக்குதலில் நேரடியாக 40000 பேர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். நேரடியான உயிரிழப்புக்களைவிட இலட்சக்கணக்கான சுகாதாரப் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இந்த அசம்பவாவித சம்பவம் இடம்பெற்று 70 வருடங்கள் கடந்துள்ள போதும் கடந்த வருடத்தில் மாத்திரம் ஹிரோஷிமாவில் 4,657 பேரும், நாகசாக்கியில் 6,030 பேரும் அணுத் தாக்குதல் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். அணு குண்டுத் தாக்குதலில் உயிரிபிழைத்தவர்களில் 63 வீதமானவர்கள் மார்ச் 2014 வரையான காலப் பகுதியில் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 வீதமானவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும், 18 வீதமானவர்களுக்கு வயிற்றில் புற்றுநோயும், 14 வீதமானவர்களுக்கு ஈரல் புற்றுநோயும் ஏற்பட்டுள்ளது.

அணுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக் காக ஹிரோஷிமாவில் 1956ஆம் ஆண்டு முதல் வைத்தியசாலையொன்று செயற்பட்டு வருகிறது. நாகசாக்கியில் 1969ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. இவற்றில் அணுத் தாக்குதலில் உயிர்பிழைத்தவர்களில் 2.5 மில்லியன் பேர் வெளிநோயாளர்களாகவும், 2.6 மில்லியன் பேர் உள்நோயாளர்களாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

உலகை உலுக்கிய இந்த அணு குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் திகதி இரண்டாவது உலகப் போரில் சரணடை வதாக ஜப்பான் அறிவித்தது. யுத்தம் முடிந்த பின்னரும் அணு குண்டுத் தாக் குதலால் ஏற்பட்ட பாதிப்புக்கு இன்னமும் ஜப்பான் விலையைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. எதுவாகவிருந்தாலும் அதன் பின்னரான ஜப்பானின் வளர்ச்சி பாரிய அழிவு நடைபெற்ற நாடுதானா இது என வியக்கவைக்கும் அளவுக்கு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத்

 


Add new comment

Or log in with...