விசாரணைக்கு உத்தரவு; கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை | தினகரன்


விசாரணைக்கு உத்தரவு; கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை

 

கண்டி நிர்வாக மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகக்கும் நாளைய தினம் (06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இன்று (05) திகண பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை தொடர்பில், பாரபட்சமற்றதும் சுயாதீனமானதுமான விசாரணையை மேற்கொள்ளுமாநு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த பகுதியிலுள்ள அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று எதிர்காலத்தில், நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் தடுக்கும் வகையில், அனைத்து தரப்புடனும் பொறுப்புடன் செயற்படுமாறும், ஜனாதிபதி பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...