விவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு | தினகரன்

விவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு

உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு-special commodity levy on imported potatoes Increased

 

ரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (24) ரூபா 29 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் உருளைக்கிழங்கு அறுவடைக் காலம் கருதி, உள்ளூர் விவசாயிகளின் நலன் அடிப்படையில் அவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் குறித்த வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலே ஒன்றிற்கு விதிக்கப்பட்ட விசேட இற்குமதி வரி ரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...