மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி | தினகரன்


மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி

 

மொறட்டுவ, அங்குலான, லுனாவ பகுதியில் ரயில் வண்டி, லொறியுடன் மோதுண்டதில் ரயில் மிதிபலகையில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் ஐவர் படு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) மாலை மருதானையில் இருந்து களுத்தறை நோக்கி பயணமான ரயிலில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குலானை ரயில் நிலையத்தில் இருந்து களு‌த்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த ரயில் சுமார் 200 மீற்றர் பயணம் செய்யும் போது மரண ஊர்வலம் ஒன்றுக்காக இடம் கொடுத்து ரயில் பாதைக்கு அருகில் நிறுத்திய லொறியில் ரயில் பயணிகள் மோதுண்டு கீழே விழுந்ததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்விபதில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(மொறட்டுவை மத்திய விசேடநிருபர் - எம்.கே.எம் அஸ்வர்)
 


Add new comment

Or log in with...