இலஞ்ச, ஊழல், பாரிய நிதி குற்ற வழக்குகளை ஆராய விசேட நீதிமன்றம் | தினகரன்


இலஞ்ச, ஊழல், பாரிய நிதி குற்ற வழக்குகளை ஆராய விசேட நீதிமன்றம்

இலஞ்ச, ஊழல் சட்டத்தை திருத்தவும் அமைச்சரவை அனுமதி

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்க்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக நீதிபதிகள் மூவரடங்கிய, விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு 1978ம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக, அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, அதில் குறிப்பிடப்படும் குற்றங்கள் தொடர்பில் சட்டமாதிபர் அல்லது இலஞ்ச, ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரால் (தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள) மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இதன்போது நிலைமைக்கு ஏற்ப, உரிய குற்றத்தின் தன்மை, பாரிய, சிக்கலான, அரசாங்கத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, தேசிய நல்லுறவு போன்ற விடயங்கள் உரிய முறைமையின் கீழ் கருத்திற் கொள்ளப்படும்.

இம்மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தை அமைக்கும் பொருட்டான விதிமுறைகளை உள்ளடக்கியதாக, 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை, அரசாங்கத்தினால் வர்த்தமானி படுத்துவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக  பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனையை, நீதியமைச்சர் தலதா அதுகோரளவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில், ஏற்கனவே காணப்படுகின்ற சட்டங்களை தற்போதுள்ள தேவைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைப்பதற்கான அவசியத்தை அடையாளம் கண்டு, இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் மற்றும் அதன் இணை சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைவாக, இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை, நீதவான் நீதிமன்றங்களில் மாத்திரமல்லாது மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏற்ற வகையிலான விதிமுறைகளை உள்ளடக்கிய, 1954 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2018.01.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகள்

01. தேர்தல் இடம்பெறும் காலங்களில் அரச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதனை தடுப்பதற்கான கட்டளைகள்  (விடய இல. 05)

தேர்தல் இடம்பெறும் காலங்களில் அரச சொத்துக்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதனை தடுப்பதற்காக அரசியல் யாப்பின் 104 ஆ (4) (அ) உப பிரிவின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகள், 2017-12-04ம் திகதியுடைய 2048ஃ2ம் இலக்க அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டளைகள் அடங்கிய அரச வர்த்தமானி அறிவித்தலினை, யோசனையொன்றை அங்கீகரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் முன்வைப்பது  தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. புகையிரத வனாந்தர காணிகளை சட்ட விரோதமான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (விடய இல. 09)

புகையிரத வனாந்தர காணிகளை சட்ட விரோதமான முறையில் புகையிரத திணைக்களத்துக்கு உரிய பணியாளர்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதனால் அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானமும் இழக்கப்படுகின்றது. அதனால், இப்புகையிரத சேவையாளர்களுக்கு சாதாரன மற்றும் நிவாரண செயன்முறையொன்றை பின்பற்றுவதற்கான சாதகமான நிலைமை தொடர்பில் தேடியறிவதற்கான 03 மாதங்களினுள் அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக தனது தலைமையில் பின்வரும் அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா  அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள்
• காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள்
• பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார அவர்கள்

03. Institute of Personnel Management Sri Lanka – IPM  நிறுவனத்தின் பெயரினை மாற்றம் செய்தல் (விடய இல. 12)

தொழில்வான்மை மிகுந்த மனித வளங்களை உருவாக்கும் நோக்கில் 1959ம் ஆண்டு Institute of Personnel Management Sri Lanka – IPM ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின் சேவையினை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் அதன் பெயரினை மாற்றுவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான வழிவகைகளை சமைத்து, 1976ம் ஆண்டு 24ம் இலக்க இலங்கை சேவை பணியாளர்கள் முகாமைத்துவ நிறுவன சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் தொழில்கள், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நான்காவது சுற்றிற்கான தீர்வை வரி சலுகையினை செயற்படுத்தல் (விடய இல. 15)

ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நான்காவது கலந்துரையாடலின் கீழ், அரச வருமானத்துக்கு மற்றும் தேசிய தொழில்துறைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாத வகையில் மேலும் 143 வர்த்தக பொருட்களை தீர்வை வரி சலுகையின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த சலுகையினை 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செயற்படுத்துவதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளும் இணங்கியுள்ளன. அதனடிப்படையில், குறித்த 143 பொருட்களையும் இலங்கையினால் இணக்கத்தினை வெளியிட்டதைப் போன்று ஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழான நான்காவது சுற்றிற்கான தீர்வை வரி சலுகையினை 2018ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து செயற்படுத்துவதற்கும், அதற்காக 1962ம் ஆண்டு 19ம் இலக்க வருமானம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கட்டளைகளை வெளியிட்டு அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைப்பது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. மீன்பிடி துறையின் முன்னேற்றத்துக்காக “Think Tank Forum”' இனை ஸ்தாபித்தல் (விடய இல. 20)

மீன்பிடி துறையின் முன்னேற்றத்துக்காக பல்வேறு துறைசார்ந்தோர் அடங்கிய “Think Tank Forum” இனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பது  தொடர்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. 1982ம் ஆண்டு 09ம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல.24)

இலங்கையில் அரச துறையில் முதன்மை பயிற்சி நிறுவனமான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் (Sri Lanka Institute of Development Administration - SLIDA)  பணியும் சேவையும் அண்மைக்காலமாக பல்வேறு கோணங்களில் மாற்றத்துக்கு உள்வாங்கப்பட்டு வந்துள்ளது. அதற்கு சமாந்தரமாக மேலும் சில மாற்றங்களை உள்ளடக்கி 1982ம் ஆண்டு 09ம் இலக்க இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ரன்ஜித் மத்தும பண்டார  அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. சோமாலியா கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்கான சமுத்திர நடவடிக்கைகள் தொடர்பான செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபித்தல் (விடய இல. 30)

சோமாலியா கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச இயந்திரமாக “The Contact Group on Piracy off the Coast of Somalia”' எனும் அமைப்பு 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இலங்கை ஆரம்பத்தில் இருந்து அங்கத்துவம் வகித்து வருகின்றது. அக்குழுவின் பணியினை செவ்வனே நிறைவேற்றுவதற்காக அதன் செயலகத்தினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான அவகாசம் கிடைத்துள்ளதுடன், அதற்கான தகைமை இலங்கை கடற்படையினருக்கு காணப்படுகின்றது. அதனடிப்படையில், முறையான வேணடுகோள் ஒன்றினை குறித்த அமைப்புக்கு விடுப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. பயன்பாடற்ற வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை    (விடய இல. 31)

வருடந்தோறும் பதிவு செய்யப்படுகின்ற வாகனங்களை எண்ணிக்கை அதிகரிப்பதனால், அது தொடர்பில் காணப்படுகின்ற ஆவணங்களும் அதிகரித்து வருகின்றன. குறித்த ஆவணங்களை பாதுகாப்பதற்கான இட வசதிகளும் குறைந்து வருவதால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சூழலில் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கட்டிடத்தில் 3.5 மில்லியன் ஆவணங்களையே பாதுகாத்து வைக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது. ஆகவே பயன்பாடற்று கிடக்கின்ற வாகனங்களின் ஆவணங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு மேற்பார்வையின் கீழ் முறையாக அகற்றுவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா  அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சட்ட நடவடிக்கை முடிவுறாத வாகனங்களின் ஆவணங்கள் எவற்றையும் இதன் கீழ் அகற்றக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.  

09. இருதரப்பு ஆலோசனை கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் டர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 32)

இருதரப்பு ஆலோசனை கலந்துரையாடல்களை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் டர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன  அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. மேல்மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 37)

மேல்மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 150.75 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் ஆஃள புசநநn வுநஉh ஊழளெரடவயவெள  (Pஎவ) டுவன. கம்பனிக்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜாஎல உள்ளேறும் மற்றும் வெளியேறும் மார்க்கத்தில் மேலதிக சுவடொன்றினை நிர்மானித்தல் (விடய இல. 38)

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜாஎல உள்ளேறும் மற்றும் வெளியேறும் மார்க்கத்தில் மேலதிக சுவடொன்றினை நிர்மானிப்பது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

12. ஹோமாகம, பிடிபனை, மாஹேன்வத்தை நனோ தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பூங்காவினை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்தல் (விடய இல. 40)

ஹோமாகம, பிடிபனை, மாஹேன்வத்தை நனோ தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பூங்காவினை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 3,088 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Access Engineering PLCக்கு வழங்குவது தொடர்பில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. குருநாகல் போதனா வைத்தியசாலையில் Stroke (பக்கவாதம்) பிரிவொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தம் (விடய இல. 41)

குருநாகல் போதனா வைத்தியசாலையில் Stroke(பக்கவாதம்) பிரிவொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 230.57 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Access Engineering PLC டுவன க்கு வழங்குவது தொடர்பில் சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. விசேட பணிப்பிரிவு அதிகாரிகளுக்காக களுபளுவாவையில் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுயொன்றை நிர்மானித்தல்  (விடய இல. 42)

விசேட பணிப்பிரிவு அதிகாரிகளுக்காக களுபளுவாவையில் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுயொன்றை நிர்மானிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 289.59 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் M/s Construction Managers and Planners (Pvt) Ltd வழங்குவது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றை இல்லாதொழிப்பதற்காக இலஞ்ச சட்டத்தினை திருத்தம் செய்தல் (விடய இல. 47)

இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏதுவான வகையில் 1954ம் ஆண்டு 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவினை திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. திறன் அபிவிருத்தி பிரிவினை விருத்தி செய்யும் நிகழ்ச்சியினை செயற்படுத்துவதற்காக ஆசியி அபிவிருத்தி வங்கியின் மேலதிக கடன் உதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 49)

திறன் அபிவிருத்தி பிரிவினை விருத்தி செய்யும் நிகழ்ச்சியினை செயற்படுத்துவதற்காக ஆசியி அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடன் உதவியினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் Demutualisation  நடவடிக்கைகளுக்காக சட்டமொன்றினை அறிமுகம் செய்தல் (விடய இல. 50)

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் னுநஅரவரயடளையவழைn நடவடிக்கைகளுக்காக சட்டமொன்றினை அறிமுகம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குதல் (விடய இல. 54)

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்ற உலர் கூப்பன் அட்டைகளை 2018ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையான காலப்பிரிவிற்காகவும் வழங்குவதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா அவர்கள் மற்றும் உள்நாட்டலுகல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 59)

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு சட்டமாதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இம்மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தினை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1978ம் ஆண்டு 02ம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமாக நீதியமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...