லலித் வீரதுங்கவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு | தினகரன்

லலித் வீரதுங்கவின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

 

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமது தனிப்பட்ட தேவையின் பொருட்டு கட்டார் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ரூபா 600 மில்லியன் நிதியில் நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள பக்தர்களுக்கு 'சில்' துணிகள் விநியோகிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமானதையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRC) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகிய இருவரும் கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...