இந்தியாவுக்கு கடத்தவிருந்த 12kg தங்க கட்டிகளுடன் இருவர் கைது | தினகரன்


இந்தியாவுக்கு கடத்தவிருந்த 12kg தங்க கட்டிகளுடன் இருவர் கைது

 

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட 12 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் இலங்கையர் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (28) இரவு கடற்படைக்கு கிடைத் தகவலுக்கு அமைய, தலைமன்னார், ஊருமலை கடற் பகுதியில் வைத்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்படவிருந்த தங்க கட்டிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்கக் கட்டிகளின் பெறுமதி ரூபா 7 கோடிக்கும் அதிகமானத எனவும், 100 கிராம் கொண்ட 120 தங்க பிஸ்கட்டுகளாக அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் குறித்த சந்தேகநபர்களுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய டிங்கி படகு உள்ளிட்ட ஏனைய பொருட்களை, யாழ்ப்பாண சுங்க அதிகாரிகளிடம் ஒப்படப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...